கீரிமலை கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை கடும் காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகின்றது. யாழ். குடாநாட்டில் இன்று பெய்து வரும் அடை மழை காரணமாக பருவ காலத்தினை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகின்றதாகவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் மீனவ சங்கத் தலைவர் மரியதாஸ் பயஸ் லோகதாஸ் தெரிவித்தார்.