கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தேவை ஏற்படும் மக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
மக்கள் தமது குடிநீர் தேவைகளை அறிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான குடிநீரை உரிய திணைக்களங்களினூடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
நாட்டில் காணப்படும் வறட்சி காலநிலை காரணமாக மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.