கிளிநொச்சி பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்படவுள்ளது

Prof.-Vasanthyகிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பொறியியல் பீடம் விரைவில் திறக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசத்தினம் தெரிவித்துள்ளார்.

யாழ். முகாமையாளர் சம்மேளனத்தின் நிகழ்வு ஈரோவிலில் நடைபெற்றபோது, சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசத்தினம் இவ்வாறு தெரிவித்தார்.

1.53 பில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்டு வரும் பொறியியல் பீடமானது, விரையில் திறக்கப்பட்டு மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், வடமாகாணத்தில் இருக்கின்றவர்கள் வெளியிடங்களிற்குச் சென்று அங்குள்ள தொழில் முயற்சிகளையும், அவர்களின் தொழில் முயற்சிகளையும் அறிந்து அவற்றினை வடமாகாணத்தில் பிரயோகிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor