கிளிநொச்சியில் கைதான முன்னாள் போராளி வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி தற்போது, வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

கிளிநொச்சியில் – ஏ9 வீதி 155 ஆவது கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பின்புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப் பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் போராளியான கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்ற 26 வயது நபரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor