கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில் இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு இரவு எட்டு இருபது மணியளவில் செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர் தம்மை படம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தியதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
மக்கள் போராட்டம் செய்கின்ற இடத்திற்கு முன்னாள் உள்ள இராணுவ காவலரணில் கடமையில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கியுடன் வந்து தம்மை படம் எடுத்ததாக கூறி கடும் தொனியில் அச்சுறுத்தியதாகவும் இதனால் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அற்ற நிலையில் குறித்த குறித்த ஊடகவியலாளர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தமது பாதுகாப்பு வேண்டி முறைப்பாட்டினை நேற்று (ஞாயிறு) இரவு பதிந்துள்ளதாகத் ஊடகவியலாளா்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினர் வந்து ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய பகுதியானது அண்மையில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்ட பிரதேசமாகும்.