கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கு பரீட்சார்த்த ரயில்

30 வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கு பரீட்சார்த்த ரயில் சேவையொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த பரீட்சார்த்த சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு கடந்த மாதம் பரீட்சார்த்த ரயில் சேவையொன்று நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கொழும்பில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் நடைபெறுகின்றன.ஓமந்தையில் இருந்து 63 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கிளிநொச்சிக்கு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

omamn1
படங்கள் : தமிழ்மிறர்