கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் – அஸ்வர் எம்.பி.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார்.

A.H.M.-Aswar

இதே­வேளை வடக்­கி­லி­ருந்து ஞாயிற்றுக்கிழமை அலரி மாளி­கைக்கு 5,000 அழ­கிய பெண்கள் வருகை தந்­தி­ருந்­த­தா­கவும் அவர்­களின் புகைப்­படம் பத்­தி­ரிகைகளில் வெளி­யா­கி­யி­ருப்­ப­தா­கவும் பத்­தி­ரிகை ஒன்­றையும் காட்­டினார்.

பாரா­ளு­மன்­றத்தில் திங்­கட்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற 2015 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தின் சிறுவர் மகளிர் விவ­காரம் மற்றும் பாரா­ளு­மன்ற விவ­கார அமைச்­சுக்கள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார்.

அஸ்வர் எம்.பி. இங்கு திருக்­குறள் மற்றும் குர்ஆன் ஆகி­ய­வற்றை உதா­ரணம் காட்டி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்

கிளி­நொச்சி மாவட்­டத்தில் 40 ஆயிரம் வித­வைகள் இருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அரி­ய­நேத்­திரன் எம்.பி. இங்கு கூறு­கிறார். ஆனால் 38,750 குடும்­பங்­களே அங்கு வசிப்­ப­தாக பிர­தி­ய­மைச்சர் ஹிஸ்­புல்லா இங்கு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அப்­ப­டி­யானால் கிளி­நொச்­சியில் மாங்கல்­யத்­துடன் வாழ்­கின்ற பெண்­களையும் வித­வைகள் என்று அரியநேத்­திரன் கூறுகிறாரா என்று கேட்க விரும்­பு­கிறேன்.

புலிகள் தான் இந்­நாட்டில் பெண்­களை வித­வை­க­ளாக ஆக்­கினர். ஞாயிறன்று வடக்­கி­லி­ருந்து ஐயா­யிரம் அழ­கிய பெண்கள் அலரி மாளி­கைக்கு வருகை தந்­தி­ருந்­தனர். அவர்­களின் அழ­கிய புகைப்­ப­டங்கள் பத்­தி­ரி­கை­க­ளிலும் வெளியாகியிருக்கின்றன. இந்த சபையில் உறுப்பினர் ரோசியும் மிக அழகான சாரி உடுத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பெண்களின் பாதுகாவலனாக இருந்து வருகிறார். என்றார்