கிணற்றுக்குள் விழுந்து உயிருக்குப் போராடிய குழந்தை இராணுவத்தினரால் உயிருடன் மீட்பு!

முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் வீட்டு வளவில் உள்ள 30 அடி ஆழமான கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு வயதும் 2 மாதங்களும் நிரம்பிய குழந்தையை முல்லைத்தீவு 59ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சாதூரியமாகக் காப்பாற்றியுள்ளனர்.

baby-1

baby-2

பிரசாதினி ஜனிஸ்கர் என்ற குழந்தையே இவ்வாறு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணியில் இருந்த இராணுவ வீரர்கள் குழந்தை கிணற்றுக்குள் விழுந்ததை அயலவர்களின் கூக்குரலால் கேட்டு உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சாதூரியமாகச் செயற்பட்டு குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட குழந்தை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.