காவிரி நதிநீர்ப் பிரச்சினை : யாழில் உண்ணாவிரத போராட்டம்

காவிரி நதிநீர்ப் பிரச்சினையில், கர்நாடகாவிலிருந்த தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் இடம்பெறும் பூரண கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று வௌ்ளிக்கிழமை (16), உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் நீண்ட காலமாக பங்கெடுத்து வரும் தமிழக மக்கள் தாக்கப்பட்டமையை எதிர்த்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் தெரிவித்தது.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு முன்னால், இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor