காவடி முட்களை திருப்பி தரவில்லையென முறைப்பாடு

வாடகைக்கு வாங்கிச் சென்ற 1008 காவடி முட்களை திருப்பி தரவில்லையென காவடி முற்களின் உரிமையாளரான அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கிட்ணன் விஜயகுமார் என்பவர் வியாழக்கிழமை (13) முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என அச்சுவேலி பொலிஸ் நிலைய சிறுகுற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.அநுராத பாலித தெரிவித்தார்.

விஜயகுமாரிடமிருந்து காவடி முட்களை கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் பத்தமேனியை சேர்ந்த நபர் நாளொன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வாங்கிச் சென்றுள்ளார்.

வாங்கி சென்றவர் அதற்குரிய வாடகைப் பணத்தை செலுத்தவில்லையென்பதுடன், காவடி முற்களையும் இதுவரையில் திருப்பி கொடுக்கவில்லை.

இந்நிலையில், காவடி முட்களை வாங்கி சென்ற நபர் தற்போது தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து, காவடி முட்களின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.