கோப்பாய் பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை மூலம் 421 பேருக்கு காலம் கடந்த பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இதில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கோப்பாய், அச்சுவேலி, உரும்பிராய், புத்தூர் ஆகிய நான்கு பிரதேசங்களில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நடமாடும் சேவை 349 உத்தேச வயதுச் சான்றிகழ்களும் 51 பிறப்புச் சான்றிதழ்களும் 10 பெயர் மாற்றச் சான்றிதழ்களும் 06 திருமணச் சான்றிதழ்களும் 05 இறப்புச் சான்றிதழ்களும் வழங்கப்ப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதேச செயலர் பிரிவில் ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களின் விபரங்கள் கிராம அலுவலர், சமூர்த்தி அலுவலர், பட்டதாரி பயிலுனர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு இல்லாதவர்களுக்கு ஆவணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.