காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புனர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காரைநகரில் மனநலம் குன்றிய யுவதியை முஸ்லிம்கள் இருவர் வன்புணர்வுக்கு உட்படுத்திய செயல் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் தலை குனிவை ஏற்படுத்தி உள்ளதுசமூக தீமைகளுக்கு எதிரான மக்கள் பிரகடனம்’ என்ற தலைப்பில் முஸ்லிம் மக்கள் சம்மேளனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை 200 முஸ்லிம் மக்களின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இத்தகைய சம்பவங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள நல்லுறவுக்குக் பாதிப்பை  ஏற்படுத்தக்கூடியவை. எனவே இத்தகைய சம்பவங்கள் தொடராது இருக்க குற்றச்செயலில் ஈடுபட்ட இருவருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால்  நீதித்துறை அதிஉச்ச தண்டனையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றுள்ளது.
இதேவேளை, இது குறித்து முஸ்லிம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இருவரின் பாதகச் செயலால் அனைவரும் பாதிப்புறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரும்பு சேகரிப்பதை வாழ்வாதரமாகக் கொண்ட முஸ்லிம்கள் பல இடங்களில் தமிழ் மக்களால் விரட்டி அடிக்கப் பட்டுள்ளார்கள். இந்த நிலை தொடருமானால் அந்தக் குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடும். இரண்டு முஸ்லிம் நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு முஸ்லிம் மக்கள் உதவவேண்டும்என்றனர்.

Recommended For You

About the Author: Editor