காந்தி சிலை உடைப்பு வழக்கு தள்ளுபடி

யாழ். அரியாலை காந்தி சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு விசாரணைகளை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்றயதினம் தள்ளுபடி செய்தது.கடந்த யூலை மாதம் 27ஆம் திகதி அரியாலை பகுதியில் உள்ள காந்தி சனசமூக நிலையத்தின் முன்பாக இருந்த சிலை உடைக்கப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கினை யாழ். நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் குறித்து பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் நிரூபிக்கப்படவில்லை.

இதனால் சந்தேக நபர்களை குற்றத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், வழக்கினையும் யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி ப.சிவகுமார் தள்ளுபடி செய்தார்.

Recommended For You

About the Author: Editor