காணி சுவீகரிப்புக்கு எதிராக தெல்லிப்பழையில் திங்கள் முதல் காலவரையறையற்ற ஆர்ப்பாட்டம்!

thellipplai_poraddam_01வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுளது என்ற அறிவிப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும்,தம்மை உடனடியாக மீளக்குடியேற அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழடை காலை 8 மணிமுதல் தொடக்கம் இந்த போராட்டம் காலவரையறையற்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தீர்மானமெடுக்கும் கூட்டம் ஒன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் தெல்லிப்பழை பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்தக்கூட்டத்தின் போது, வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை உடனடியாக மீளப்பெறவேண்டும் என்றும்,இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இராணுவத்தினரது இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே பாதிக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போரட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor