காணிகளை அபகரிப்பவர்களும் பயங்கரவாதிகள் – மாவை சேனாதிராஜா

mavai mp inஎவரேனும் காணிகளை அபகரிக்கின்றனர் என்றால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நோக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காணிகளை சுவீகரிப்பதனால் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காணிப் பிரச்சினை காரணமாக லட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

எவரேனும் காணிகளை அபகரித்தால் அவர்களை பயங்கரவாதிகளாகவே நாம் நோக்குவோம்.

வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை வழங்குமாறே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.