காணாமல் போன 13 வயது சிறுவன் மீட்பு

Human_rightsகரவெட்டி கரணவாய் பகுதியில் காணாமல் போன 13 வயதுடைய சிறுவனை மீட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தெரிவித்தார்.

16 ஆம் கட்டை கரவெட்டி கரணவாய் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி நிலக்ஷன் (வயது 13) என்ற சிறுவன் கடந்த 10 ஆம் திகதி காணாமல் போனதாக அவரது சகோதரி கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த சிறுவனை ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து மீட்டுள்ளதாக சிறுவனின் சகோதரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், முறைப்பாட்டினையும் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

13 வயது சிறுவனை காணவில்லையென முறைப்பாடு