காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

திருவடி நிலைப்பகுதியில் நேற்று மாலை கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர்களில் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருவடிநிலை பகுதியில் கடலுக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நேற்று மாலையே நீந்திக் கரையை அடைந்துள்ளார். எனினும் மற்றையவர் கரை திரும்பாததையடுத்து அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மற்றும் உறவினர்களால் தேடுதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இளைஞன் மாதகல் பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லியான் சுழிபுரத்தைச் சேர்ந்த யேகநாதன் சுரேஸ்குமார் (வயது19) என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியது.