வட மாகாணத்தில் காணாமல் போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்கள் இணைந்து சங்கம் ஒன்றையும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்து காணாமல் போனோர் சம்மேளனம் ஒன்றையும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் இணைந்து யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய கலந்துரையாடலில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் அதற்கு வெளியேயும் காணப்படும் காணாமல் போனோரின் உறவினர்களை ஒன்றிணைத்து, அதுகுறித்த செயற்பாடுகளை ஒருமித்து முன்னெடுப்பதே இதன் நோக்கமாக உள்ளது.