காணாமல் போனோர் சங்க ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்றார் மனித உரிமைகள் ஆணையாளர்

Arpaddam-jaffnaயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த சந்திப்பு இன்றுக்காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு நூலகத்திற்க்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர். இதில் தமிழ்,சிங்கள் மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், தமிழ்த்தேசிய முன்னணியின் ஆதரவாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

பொது நூலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிற்காக முன்வழியாக வருகைதந்த ஆணையாளர் நவனீதம்பிள்ளை சந்திப்புகளை முடித்துக்கொண்டு பொது நூலகத்தின் பின்வழியாக சென்றுவிட்டார் என்று மக்கள் தெரிவித்தனர்.