காணாமல் போனோர் ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

karaithurai-missingகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரையில் இந்த ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட இந்த மூவரடங்கிய குழுவிற்கு, ஆலோசனை வழங்கும் பொருட்டு ஜனாதிபதி சர்வதேச நிபுணர்கள் மூவரை அண்மையில் நியமித்தார்.

இந்த நிலையில், இந்த ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor