காணாமல் போனோரின் பெற்றோர் ஒன்­றிய அலு­வ­ல­கம் கிளிநொச்சியில் திறந்­து­வைப்பு

யுத்தத்தின் போது இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர் ஒன்றியத்தின் அலுவலகம்
கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

erantha-kanamal-ponor-aluvalakam-office-kilinochchey

இந்த அலுவலகத்தை கிளிநொச்சி ஏ -9 வீதியில் மாவட்டச் செயலகத்திற்கு அருகில் இல. 37 இல் கிளிநொச்சி திரேசா தேவாலயப் பங்குத்தந்தை ஜோர்ஜினால் நாடாவெட்டித் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினாலும் இடப்பெயர்வுகளினாலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு நகர்த்த முடியாமலும் சிரமப்பட்ட போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு உதவி வருகின்றது.

இந்த வகையில் கிளிநொச்சிக்கான அலுவலகமும் கடந்த செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர், உறவினர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ் அலுவலகத்தில் இறந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஒன்றியத்தின் கிளிநொச்சி அலுவலக அமைப்பாளர் கோபால் குணாளன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி முருகன் ஆலய பிரதம குருக்கள், தென்னிந்தியத் திருச்சபையின் கிளிநொச்சி அருட்தந்தை ஜோன் தேவகாம், இறந்த மற்றும் காணாமல்போன பெற்றோர்களின் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் ஆனந்த ஜெயமால், அதன் வடக்கு கிழக்கு அமைப்பாளர் வேலுப்பிள்ளை மகேஸ்வரன், கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி திருலோகமூர்த்தி, கிராம அலுவலர்கள், இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் பெற்றோர், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.