காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் ஹர்த்தால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து திருநெல்வேலியிலும் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஹர்த்தலை முன்னிட்டு திருநெல்வேலி வர்த்தர்கள் தங்களது கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு கடைகள் மூடப்பட்டுள்ளமையால் மக்களின் நடமாற்றம் குறைவாக காணப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சியிலுள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்த வர்த்தக நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன.

மேலும் கிளிநாச்சி சேவை சந்தை தொகுதி மூடப்பட்டுள்ளமையால் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதுடன் மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மாணவர் வருகை இன்மையால் பாடசாலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts