இளவாலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நபர், குடும்பப் பிரச்சினை காரணமாக ஒழிந்திருந்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.
இளவாலை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜெசிந்தன் (வயது 27) என்பவரே காணாமல் போனதாக பொலிஸிலும் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் வீடு திரும்பியுள்ளதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாகவே கோவப்பட்டு ஒழிந்திருந்ததாகவும் இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில் பிராந்திய இணைப்பதிகாரி த.கனகராஜ் தெரிவித்தார்.