காணாமற் போனோர் விவரங்களை பதிவுசெய்யக் கோருகிறது கூட்டமைப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டோர் மற்றும் காணாமற் போனோரின் பெயர் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளது.கொக்குவிலிலுள்ள தனது இல்லத்தில் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்

யாழ். குடாநாட்டில் காணாமற் போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளன. இதன் மூலம் அவர்கள் சிறைச்சாலைகளில்  இருக்கிறார்களா? அல்லது வேறிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை அறியவுள்ளதுடன், காணாமல் போனவர்களின் விவரங்களை இந்த ஆண்டில் வெளிக்கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.