காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு

இணுவில் கந்தசாமி ஆலயத்துக்கு முன்பாகவுள்ள அச்சகத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம், சனிக்கிழமை(04) பிற்பகல் மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர்.

இணுவில் கந்தசாமி கோவிலடியைச் சேர்ந்த கே.செல்வானந் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

அச்சகத்தில் இருந்த இவர் நீண்டநேரமாக வெளியில் வராததால் சந்தேகம் கொண்ட பக்கத்துக் கடைக்காரர்கள் கடைக்குள் சென்று பார்த்தபோது அவர் நிலத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார்.

உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது அவர் மரணமடைந்ததாக வைத்தியசாலையில் கூறப்பட்டது.

கடையில் இருந்த ஆழியில் மின்சாரம் ஒழுக்கு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts