காணாமற்போனோர் அலுவலக அமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தங்கள் உடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக இதனை நிறைவேற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தது.
இதனால் பாராளுமன்றத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டிருந்தது. மேலும் பாராளுமன்ற நடவடிக்கைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன், கட்சித் தலைவர்கள் கூட்டமும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.