புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலில் காயமடைந்த 05 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான்.
கனடா செல்வதற்காக வடக்கில் இருந்து வந்த குழுவொன்று மீது நேற்று அதிகாலை 2.20 மணியளவில் காட்டு யானை தாக்குதல் நடத்தியது.
இதனால் வேனில் இருந்த 39 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 05 வயது சிறுவன் ஒருவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.