காங்கிரஸ் படுதோல்வி, டில்லியில் யார் ஆட்சி?

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் அறுதி பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் அங்கு யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

131208133500_modi_bjp_304x171_reuters_nocredit

டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 32 இடங்களை பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. 28 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி வென்று 2ம் இடத்தை பெற்றது. தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்த காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், அகாலி தளம், மற்றும் சுயேட்சை ஆகியன தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 32 இடங்களை மட்டுமே கைபற்றி உள்ளது. அந்த கட்சி ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை. இந்நிலையில் அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரான ஹர்ஷவர்தன் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க உரிமை கோர மாட்டோம் என கூறியுள்ளார்.

இதற்கிடையே 2-ம் இடம் பெற்ற ஆம்ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதால் எதிர்கட்சியாக செயல்பட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது. யாருக்கும் ஆதரவு அளிக்க போவதில்லை என்றும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்க போகிறது என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜக-வும், ஆம்ஆத்மி கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோராத பட்சத்தில் துணைநிலை ஆளுநர் எந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.