கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற வேள்வியில் 400 இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டடப்பட்டன.
இன்று சனிக்கிழமை காலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைர் தொடர்ந்து வைரவருக்கு பொங்கல் இட்டு படையல் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து வேள்வி இடம்பெற்றது. வேள்விக்காக இன்று அதிகாலை முதல் பொது மக்கள் கோவிலுக்கு உழவுயந்திரங்கள், லாண்ட் மாஸ்ரர்கள் மற்றும் கால் நடையாகவும் கடாக்களைக் கொண்டுவந்தார்கள்.
காலை முதல் தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து வெட்ட அனுமதி வழங்கினார்கள்.
காளை என்று அழைக்கப்படும் கடாய் வெட்டப்படும் இடம் நீதிமன்றத்தின் பணிப்புக்கமைவாக மூடிக் கட்டப்பட்டிருந்தது. தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி நந்தகுமார் கடா வெட்டும் காளை என்ற இடத்தில் நின்று உரிய விதிமுறைகளுக்கு அமைவாக கடாக்கள் வெட்டப்படுகின்றனவா என்பதை மேற்பார்வை செய்தார்.
ஆலயத்தில் சுமார் 400 இற்றகு மேற்பட்ட காடாக்களும் முன்னுறு வரையிலான கோழிகளும் வெட்டப்பட்டன. அத்துடன் ஒரு தொகுதி கோழிகள் உயிருடன் ஆலயத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
ஆலய சுற்றாடலில் பாதுகாப்புக் கருதி இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஞ்சுள டி சில்வா தலைமையிலான சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.