கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க யாழ். பல்கலை நிர்வாகம் இணக்கம்

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள உயர் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருத்து தெரிவிக்கையில்,

‘யாழ். பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அதனை விரைவில் தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் முப்பது வருட யுத்தம் காரணமாக வடக்கு மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கிய நிலையில் உள்ளது.

ஏனைய மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் விரைவில் யாழ். பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்குமாறு கோரியதை அடுத்து, அதற்கு இணக்கம் தெரிவித்த பல்கலைக்கழக நிர்வாகம் விரைவில் பல்கலைக்கழக கல்விச் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்தது’ என்றார்.

உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உயர்க் கல்வி பிரதி அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க, உயர்க்கல்வி அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் செல்வி. வசந்தி அரசரட்ணம், பீடாதிபதிகள், யாழ் இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

unimeeting1

Recommended For You

About the Author: Editor