கல்வியாண்டு குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு – வீதியில் இறங்கிய மாணவர்கள் !!

காலி, கலுவெல்ல இலங்கை உயர் தொழிநுட்ப கல்வி நிலைய (SLIATE), மாணவர்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.

நான்கு வருடகால கல்வி நடவடிக்கைகள் மூன்று வருடங்களாக குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

காலி கடற்படை முகாமில் ஆரம்பமான இந்த எதிர்ப்புப் பேரணி காலி நகர்வரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் சுமார் 800 பேர் கலந்து கொண்டுள்ளதோடு, இந்த எதிர்ப்புப் பேரணி காரணமாக வாகனப் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.