கல்வியங்காடில் ஆசிரியர் தூக்கில் தொங்கி பலி

body_foundகல்வியங்காடு ஜிபிஸ் வீதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்த ஆசிரியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், மற்றும் சகோதரி ஆகியோர் வீட்டில் இல்லாத சமயத்தில் குறித்த ஆசிரியர் தூக்கிட்டுக் கொண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.உயிரிழந்த ஆசிரியருக்கு 35 வயது என தெரிவிக்கப்படுகிறது.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.