கல்வித்தகைமை அவசியம் அல்ல,வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

north-provincial-vadakku-npcவடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கல்வித்தகைமை கட்டாயம் அல்ல என பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபை முதல்வர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்காக முகாமைத்துவ மற்றும் அலுவலக உதவியாளர்களை நியமிப்பதற்கு கல்வித்தகைமை கட்டாயப்படுத்தாது விரைவில் நியமனங்களை பிரதம செயலாளர் வழங்க வேண்டும் என்று அவைத்தலைவர் கந்தையா சிவஞானத்தினால் சபையில் பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 14.10.2013 அன்று பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் படி வடக்கு மாகாண உறுப்பினர்களுக்கு முகாமைத்து உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் வழங்கப்படும் போது க.பொ.த சாதாரணம் மற்றும் க.பொ.த உயர்தம் ஆகிய கல்வி தகைமைகள் பார்க்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவ்வாறான கல்வித் தகைமைகள் பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களுக்கும் குறித்த சட்டம் இல்லை என்பதாலும் விரைவில் அவர்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் என்றும் பிரேரணை கொண்டுரப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Posts