கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு யாழ். பல்கலை நிர்வாகம் கோரிக்கை; மாணவர் மறுப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டமொன்று, கலைப்பீட மாணவர் ஒன்றியத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் நேற்று பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான கூட்டங்கள் ஒவ்வொரு பீடங்களின் மாணவர் ஒன்றியத்துடன் தனித்தனியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினால் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நேற்று கலைப்பீட மாணவர் ஒன்றியத்துடன் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி மீண்டும் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதற்கு இணங்க மறுத்த ஒன்றியம், மாணவர்களை விடுவிக்கும்வரை கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor