கல்விச் செயற்பாடுகளைஆரம்பிக்க ஒத்துழைக்காவிடில் பதவி விலகுவேன் – துணைவேந்தர் எச்சரிக்கை!

யாழ்.பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை நாளை ஆரம்பிக்க முடியாது போனால் துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மாணவர் பிரதிநிதிகளிடம் கூறியதாக தெரியவருகின்றது.யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், மாணவர்கள் பிரதிநிதிகள், துணைவேந்தர் ஆகியோர் இன்று கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

இதன்போது பல்கலைக்கழகத்தை நாளை ஆரம்பிக்க வேண்டும. கல்விச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் நாளைய தினமே பல்கலைக்கழத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக செய்ற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இவ்வாறு செய்யாது போனால் உடனடியாக தனது துணைவேந்தர் பதவியை இராஜினாமா செய்வதோடு பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூடுவதையும் தடுக்க முடியாது என்று கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க யாழ். பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்காது போனால் மூடிவிடப் போவதாக எச்சரித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக செயற்பாடுகள் நாளை ஆரம்பிப்பதென இறுதியாக முடிவெடுக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Recommended For You

About the Author: webadmin