யாழ்.புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புத்தூர் மேற்கு கலைமதி குடியிருப்பின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றக்கோரி பிரதேச மக்கள் நேற்றுடன் 66 நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று காலையில் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாகவும், பிற்பகலில் யாழ்.கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய ஜனநாயக மாக்சிச கட்சி, சமூக நீதிக்கான அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.