கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளுக்கு திரும்பினர்

jaffna-universityபல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை விரிவுரைகளுக்கு திரும்பியுள்ளனர்.கலைப்பீடத்தை சேர்ந்த 13 மாணவர்களுக்கு கடந்த செப்டெம்பர் 13ஆம் திகதி வெளிக்கிழமை முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டிருந்து.

இந்த தீர்மானத்திற்கு கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் எதிர்ப்புத் வெளியிட்டதுடன் குறித்த தினத்திலிருந்து விரிவுரைகளை பகிஷ்கரிக்க தீர்மானித்தது. இதனால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரசரட்ணம் சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது வகுப்புத்தடை விதிக்கப்பட்ட மாணவர்களின் தடை உத்தரவு நீக்கப்படவுள்ளதாக உப வேந்தர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து இன்று 25ஆம் திகதி புதன்கிழமை முதல் கலைப்பீட மாணவர்கள் விரிவுரைகளில் கலந்துகொள்வது என கலைப்பீட மாணவர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலையின் 13 மாணவர்களுக்கு வகுப்புத்தடை! மாணவர்கள் கால வரையற்ற பகிஷ்கரிப்பில்!