கலைப்பீட இறுதியாண்டு மூன்றாம் ஆண்டு மாணவர்கள் வெளியேற்றம்!

jaffna-universityயாழ். பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவர்களும் மூன்றாம் வருட மாணவர்களும் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைத்துறை இறுதியாண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையே புதன்கிழமை இடம்பெற்ற கைகலப்பை தொடர்ந்தே மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்போது ஆங்காங்கே ஆண் பெண் விரிவுரையாளர்கள் பலர் இறுதியாண்டு மாணவர் கும்பல் ஒன்றால் தகாத வார்த்தைகளால் பேசப்பட்டதாகவும் சில விரிவுரையாளர்கள் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது

இதனை கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு கலைப்பீட இறுதியாண்டு மாணவர்களையும் மூன்றாம் வருட மாணவர்களையும் வருகை தரவேண்டாமென பல்கலைக்கழக துணைவேந்தர் மேலும் கூறினார்.

விரிவுரையாளர்கள் அவமதிக்கப்பட்ட விடயத்தில் மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் மாணவர்கள் சிலர் இடைநிறுத்தம் செய்யப்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேவேளை பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் சகல மாணவர்களும் மாணவர் அடையாளஅட்டை பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலையில் கைகலப்பு