கறுப்பு ஜூலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாளர் ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் இன படுகொலையின் 33ஆவது ஆண்டு இன்று நினைவுகூறப்படுகிறது.
இதனை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணியினரால் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் சுதந்திரத்திற்கு முன்னரும் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களை பிளவுபடுத்துவதாக அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.