ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட கர்ப்பிணிகளுக்கான 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கொஞ்சம் கொஞ்சமாக வழங்கப்படும் என்று அமைச்சரவைப்பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 2,000 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.