கரவெட்டி பிரதேச சபை தவிசாளரின் வீட்டின் மீது தாக்குதல்

attack-attackகரவெட்டி பிரதேச சபை தவிசாளர் சு.வியாகேசுவின் வீடு இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமாரட்சி உடுப்பிட்டியில் அமைந்துள்ள தனது வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வானொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்படி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கதவுகள் மற்றும் வீட்டில் தரித்து நின்ற வாகனம் உள்ளிட்டவை சேதமாக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.