கமலுக்காக கவலைப்பட்டார் முதலமைச்சர்

vickneswaran-vicky-Cmகமலை நீதிமன்றம் குற்றவாளி என இனம் காண முன்னரே கட்சி அவரை குற்றவாளி என தீர்மானித்தது எமக்கு கவலை அளிப்பதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் 8 ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இவ் அமர்வின் போது மாகாணசபை உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில் புதிய எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா அனுபம் மிக்கவர் என்றும் எதிர்வரும் காலங்களில் சபை அமர்வுகள் காரசாரம் மிக்கவையாக இருக்கும் என்றும் தெரிவித்ததுடன் வடக்கு மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு வரவேற்புத் தெரிவிப்பதாகவும் அவர் சபை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இன்றைய அமர்வுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts