கனடா நாடாளுமன்ற வளாகத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடுத் தாக்குதல் – 2 பேர் பலி

கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் தலைநகரமான ஒட்டவாவில் உள்ளது அந்நாட்டின் நாடாளுமன்றம் உள்ளது. இந்நிலையில், அங்கு அத்துமீறி நுழைந்த மர்மநபர்கள் இருவர் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

canda-1

canda-2

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். பின்னர் அவர்கள் மர்மநபர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேசிய போர் பாதுகாப்பு நினைவக சின்னத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு வீரர் ஒருவரும், தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவரும் பலியானார்கள்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது நாடாளுமன்ற அரங்குக்குள் அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இருந்தாகவும், பின்னர் அவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூடுத் தாக்குதலைத் தொடர்ந்து கனடா நாடாளுமன்ற பகுதி முழுவதும் உடனடியாக மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றொரு மர்ம நபர் இன்னும் நாடாளுமன்ற வளாகத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அவரைக் கைது செய்ய ராயல் கனடியன் மவுண்டட் போலீசார் குண்டு துளைக்காத உடைகள் அணிந்து அரங்கிற்குள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கும் முன் சிறிய கியூபெக் நகரத்தில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களை தாக்கி விட்டு மர்ம நபர் ஓடிச்சென்ற சம்பவம் நடைபெற்றது. இது தீவிராத செயலாக இருக்கும் அதிகாரிகள் கருதும் நிலையில், பொதுவாக அமைதியாக காணப்படும் கனாடாவின் தலைநகரமான ஒட்டாவாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா கண்டனம்

கனடா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறில்லையில், ‘கனடா நாட்டின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மர்மநபர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் விதமாக கனடா நாட்டிற்கு துணை நிற்போம்’ என தெரிவித்துள்ளார்.