கனடாவில் வசிக்கும் ஒருவருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் உள்ள மாரீசன் கூடல் கிராம அலுவலர் பிரிவில் கனடாவில் வசிக்கும் ஒருவர், இந்திய வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இரட்டைக் குடியுரிமை உள்ள ஒருவருக்கே இவ்வாறு இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஆறு மாதங்கள் கனடாவிலும் ஆறு மாதங்கள் இலங்கையிலும் தங்கிருக்கும் குறித்த நபர் இந்திய வீட்டுத்திட்டத்தில் வீடு பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாவும், அவ்வாறு விண்ணப்பித்தவர் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத்திட்டத்தில் வன்னியில் இருந்து மீள்குடியேறிய மக்கள் பலர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு புறக்கணிக்கப்பட்டமக்கள் நேற்று சண்டிலிப்பாய் பிரதேச செயகத்திற்குசென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் முறையிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.