Ad Widget

கனடாவில் காணாமற்போன தமிழ்ப் பெண்ணைத் தேடி பொலிசார் வேட்டை!

கனடாவில் வசித்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போனதையடுத்து பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாக, ரொறொன்ரொ பொலிசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

komathy-canada-missing

கனடாவைச் சேர்ந்த கோமதி ரத்தினசிங்கம் என்ற பெண்மணியை கடந்த ஒக்டோபர் 4அம் திகதி முதல் காணாவில்லை. இவர் கடைசியாக Finch Avenue West/ Keele Street அருகே காணப்பட்டார்.

இவரது உயரம் 5.2 அடி. ஒல்லியான தேகம். காணாமல்போன அன்று நீல நிற ஜீன்ஸ் மற்றும் நீல நிற சட்டை அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை பற்றி எதேனும் தகவல் தெரிந்தால் 416-808-3100 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது TOR என்று டைப் செய்து 274637 எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு www.222tips.com என்ற இணையப்பக்கத்தை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Posts