கனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனம் தொடர்பான விசாரணை பிற்போடப்பட்டுள்ளது

Human_rightsகனகரத்தினம் மகாவித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் அதிபர் வெற்றிடத்துக்கான நேர்முகத் தேர்வு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய சென். ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபருக்கு இப்பதவி வழங்கப்படாமல் பெரியபுலம் மகாவித்தியாலய அதிபருக்கு வழங்கப்பட்டது.

இந்நியமனத்தில் முறைகேடு இருப்பதாக கூறி சென்.ஜேம்ஸ் மகளிர் கல்லூரி அதிபர் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்ததற்கு இணங்க நேற்றய தினம் விசாரணை மேற்கொள்ளவிருந்த நிலையில், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலனினால் வழங்கப்பட்டிருந்த விளக்கத்தினை ஏற்ப மறுத்த காரணத்தினால் கல்வி அமைச்சின் செயலாளரை விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை மேற்கொள்வதற்கான திகதி முடிவுசெய்யப்படாமையினால் விசாரணை பிற்போடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் மேலும் கூறினார்.