கந்துவட்டிக்காரர் கொலை மிரட்டலுக்கு பயந்து இந்தியா சென்ற பெண்!

gun-fireகந்துவட்டிக்காரர் கொலை மிரட்டலுக்கு பயந்து, படகில் பேரன்களுடன் தனுஷ்கோடி சென்ற பெண்ணிடம், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வல்வெட்டிதுறையை சேர்ந்த 48 வயதுடைய பெண்னே இவ்வாறு பேரக்குழந்தைகள் இருவருடன் படகில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது

குறித்த பெண்ணிடம் 15 ஆயிரம் ரூபாய் வாங்கிய இலங்கை படகோட்டிகள், மன்னார் கடற்கரையில் இருந்து, படகில் ஏற்றி, நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இறக்கி விட்டு சென்றனர். தகவல் அறிந்த இந்திய பொலிஸார் பெண்ணிடம் விசாரணை நடத்திய பின்னர், மண்டபம் கடலோர பாதுகாப்பு பிரிவு எஸ்.ஐ. மண்டபம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்.

பொலிஸாரின் விசாரனையின் போது பெண் கூறியதாவது: மருமகன், மகள் ஆகியோர் வியாபாரத்திற்காக, கந்துவட்டிக்கு, 15 ஆயிரம் ரூபாய் வாங்கினர். திருப்பி செலுத்த முடியாததால், வட்டிக்கு வட்டி போட்டு, ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டு, கந்துவட்டிக்காரர் கொலை மிரட்டல் விடுத்ததால், இருவரும் ஓடிவிட்டனர். பணத்தை என்னிடம் கேட்டு தொந்தரவு செய்தனர். பணத்தை செலுத்தாவிடில், பேரக்குழந்தைகளை கொன்று விடுவதாக மிரட்டினர். இதனால் உயிருக்கு பயந்து, பேரன்களுடன் தனுஷ்கோடி வந்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை ஒரு மணியளவில் படகில் புறப்பட்டு 5 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சென்றடைந்துள்ளனர். அகதியாக சென்றுள்ள இப் பெண் ஏற்கெனவே தமிழகத்திற்கு சென்று மண்டபம் முகாமில் தங்கியிருந்து பின் இலங்கைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணை போலீசார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.