கண்ணிவெடி வெடிப்பு: ஒருவர் காயம்

BOMS_minsவடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ டிரஸ்ட் நிறுவன பணியாளர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் ஜே.லியோ (வயது 21) என்ற இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.