Ad Widget

கண்ணிவெடிகளிலிருந்து இலங்கை 2020இல் விடுபடும்

மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் முல்லைத்தீவில் உள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படுமிடத்து 2020ஆம் ஆண்டளவில் கண்ணிவெடிகள் அற்ற சுதந்திர நாடாக இலங்கை திகழும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் மூலம், யுத்தத்தால் அகதிகளாகி முகாம்களில் வசித்துக்கொண்டிருக்கும் மக்களின் மீள்குடியேற்றங்களை துரிதப்படுத்த முடியும் என்பதுடன், விவசாயத்தை முன்னெடுத்து எப்போதும் போன்ற ஒரு சாதாரண வாழ்க்கை முல்லைத்தீவு மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்என்றும் அவர் தெரிவித்தார்.

மனிதாபிமான அடிப்படையில், அபிவிருத்தி அடைந்த நாடுகள் கண்ணிவெடியகற்றும் உதவிகளை இலங்கைக்கு செய்யுமாயின் இந்தப் பணியை துரிதப்படுத்த முடியும் என்று ஹலோ ட்றஸ்ட் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெனீவாவின் கண்ணிவெடிகளிலிருந்து இலங்கையை விடுவிக்கும் கருத்துக்கிணங்க அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும என்றும் அவர் கோரியுள்ளார்.

Related Posts