கண்டன பிரேரணையை நிறைவேற்ற யாழ். மேயர் மறுப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினரால் சபையில் முன்வைக்கப்பட்ட கண்டன பிரேரணையை நிறைவேற்ற யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் தாக்கப்பட்டமை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி கூட்ட ஆரம்பத்தில் கண்ட அறிக்கையை சபையில் முன்வைத்தார்.

எனினும் குறித்த பிரேணையை நிறைவேற்ற யாழ். மேயர் உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்படாமல் சபை நடவடிக்கைகளை அடுத்த அமர்விற்காக யாழ். மேயர் ஒத்திவைத்தார்.